கனமழை காரணமாக வாலாஜாபேட்டை தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாலாஜா பேட்டை தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இங்கிருந்து காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி சக்கரமல்லூர் ஏரிகளுக்கு 4,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அமைச்சர் கே.சி.வீரமணி தடுப்பணையை நேரில் பார்வையிட்டு மலர் தூவி வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் வருவதாக தெரிவித்தார்.