Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கைதான கணவன்… விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயற்சி… காவல் நிலையம் முன் பரபரப்பு..!!

கஞ்சா விற்ற வழக்கில் கைதான கணவனை விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைபொருள் விற்பவர்களை பிடிக்கும் பணியில் தஞ்சை போலீஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கூடலூரில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த 36 வயதான ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. ஜெயக்குமார் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஜெயக்குமாரின் மனைவி வெண்ணிலா தனது 2 குழந்தைகளுடன் காவல் நிலையத்திற்கு முன் வந்து கணவனை விடுதலை செய்யாவிடில் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட அங்கிருந்த போலீசார் வெண்ணிலாவை காப்பாற்றினர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |