மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி தமிழக அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு அரசு குழு அமைக்க வில்லை. அதனால் மத்திய மற்றும் மாநில அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக திமுக எம்பி இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் உயர்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மத்திய மற்றும் மாநில அரசுகள் மீறியதாக மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.