நம் உரிமைகளை காக்கும் சமூகநீதியை வீழ்த்த நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்திய அளவில் சமூக நீதியை நிறைவேற்றிய சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் விபி.சிங் மறைந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “திராவிட இயக்கத்தின் சமூகநீதி கனவை இந்திய அளவில் நிறைவேற்றிய சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் மறைந்த விபி.சிங் அவர்களின் நினைவு நாளில் நாம் அனைவரும் அவரை போற்றி வணங்குவோம்.
மேலும் பறிக்கப்படும் நம் உரிமைகளைக் ஆகவே சமூக நீதி. அதை வீழ்த்த நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.