‘அந்தகாரம்’ படக்குழுவினருடன் நடிகர் கமல்ஹாசனிடம் ஆசி பெற்றதை இயக்குனர் அட்லி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் அட்லி ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது அட்லி தயாரிப்பில் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியான ‘அந்தகாரம்’ திரைப்படம் பலரது பாராட்டை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் இயக்குனர் விக்னராஜனின் முதல் படம். இவரது வித்தியாசமான கதைக்களத்தால் முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனை அட்லி ‘அந்தகாரம்’ படக்குழுவினருடன் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்றதை இயக்குனர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#Andhagaaram team got blessing from @ikamalhaasan sir , thanks so much for always being with us and supporting us sir , your words has always given us the encouragement to do SM thing new sir, luv u sir ❤️ … pic.twitter.com/keO6YRAwMi
— atlee (@Atlee_dir) November 27, 2020