தாழ்வாக கிடந்த மின் கம்பி மீது பஸ் உரசியதால் தீ பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் பயணிகள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் பலர் பயணம் செய்துகொண்டிருந்தனர். ஜெய்ப்பூர் மாவட்டம் அன்ஞ்ரோல் என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக கிடந்த மின் கம்பி மீது உரசியது. இதனால் பஸ்சில் திடீரென தீப்பற்றியது. பஸ்ஸின் மேற்பரப்பில் தீப்பற்றி அதை கவனிக்காத டிரைவர் தொடர்ந்து பஸ்சை இயக்கியுள்ளார்.
இதனால் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி பஸ் முழுவதும் எரிந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். தீப்பற்றியதை கவனித்த பயணிகள் அலறியடித்து பஸ்ஸிலிருந்து ஓடினர். ஆனால் தீ விபத்தில் சிக்கி 3 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர் பற்றி எரிந்த பஸ்சை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து போலீசார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.