Categories
தேசிய செய்திகள்

“பொம்மை துப்பாக்கி விவகாரம்” உதவிய சுங்கத்துறை அதிகாரிகள் – சிபிஐ வழக்கு…!!

நிஜ துப்பாக்கிகளை பொம்மை துப்பாக்கி என்று இறக்குமதி செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ  பதிவு செய்துள்ளது.

சுங்கத்துறை அதிகாரிகள் பொம்மை என்ற பெயரில் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ய உதவியதற்காக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் அறிக்கையில், “கடந்த 2016, 2017 வருடங்களுக்கு முன்பு சரக்கு விமானத்தில் வேலை பார்த்து வந்த ஆறு சுங்கத்துறை அதிகாரிகள் நிஜமாகவே வந்த உண்மையான துப்பாக்கிகளை பொம்மை துப்பாக்கிகள் என்று ஆவணத்தில் மாற்றி இறக்குமதி செய்துள்ளது.

இது வெறும் ஊழல் சார்ந்த வழக்கு மட்டுமல்ல பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளும் இருகிறது. எனவே ஊழல் தடுப்பு சட்டம், ஆயுத சட்டம் ஆகியவற்றின் கீழ் அரசுத்துறை அதிகாரிகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 2014ம் வருடத்தில் ஆறு சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் Bajaj Automative Solutions என்ற நிறுவனத்தின் 655 துப்பாக்கிகளை பொம்மை துப்பாக்கி இறக்குமதி செய்துள்ளனர்.

இப்படி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சிறப்பு புலனாய்வு சோதனை செய்ததில் அதில் நிஜ துப்பாக்கிகள் தான் இருக்கின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தும்போது லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் ஆவணங்கள் சிக்கியுள்ளன. மேலும் இறக்குமதி கொள்கைகளை மீறியதால் இறக்குமதி செய்தவர்களுக்கு லாபமும் இந்திய அரசுக்கு இழப்பும் ஏற்படுகிறது” என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

Categories

Tech |