Categories
உலக செய்திகள்

“கபகபவென்று வந்த புகை” மனநல நோயாளி செய்த செயல்…. ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனநல மருத்துவமனையில் மனநல நோயாளி ஒருவரை சக நோயாளியே எரித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வடக்கு லண்டனில் ஹைகேட் மனநிலை மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு சக நோயாளியான ஜோர்டான் (22) என்பவர் கார்டெல்(46) என்பவரை ஏறியது கொன்றுள்ளார். மனநல நோயினால் அவதிப்பட்டு வந்த கார்டெல் ஹைகேட் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட இரண்டு தினங்களுக்கு பிறகு அறையிலிருந்து புகைவும், தீப்பிழம்பும் வெளியேறியுள்ளது.

இதனால் அங்கு சென்று ஊழியர்கள்  பார்த்தபோது போர்வையில் சுற்றப்பட்டு கருகிய நிலையில் கார்டெல் உடலை ஊழியர்கள் மீட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜோர்டான் அளித்துள்ள வாக்குமூலத்தில், “கார்டெல் ஒரு ஓரின ஈர்ப்பாளர். எனவே நான் அவரை விரும்பவில்லை. அதனால் நான் அவரை எரித்து கொன்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 முதல் 2018 வரையான காலகட்டத்தில் மனநல சிகிச்சை மேற்கொண்டு வந்த ஜோர்டான் அனைத்து மனநல மையங்களிலும்இது போன்று மூர்க்கத்தனமாகவே நடந்து கொண்டுள்ளார். இதனால் ஹைகேட் மையத்திலும் அனுமதிக்கப்பட்ட அவரை 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணிக்க ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் ஊழியர்கள் மெத்தன போக்கினால் இந்த பரிதாப நிலை நடந்துள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஜோர்டான் நீதிமன்ற விசாரணைக்கு ஏற்றவராக இல்லை என்பதால் அவரை மீண்டும் மனநல மருத்துவமனைக்கு நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது.

Categories

Tech |