மதுரை மற்றும் திண்டுக்கல் புத்தக கண்காட்சி நடத்தப்படுவதால் மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒவ்வொரு வருடமும் புத்தக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி திண்டுக்கலில் இந்த வருடத்திற்கான புத்தக கண்காட்சி கடந்த 20ஆம் தேதி தொடங்கி உள்ளது. மதுரையில் 22ஆம் தேதி தொடங்கியது. இந்த இரண்டு புத்தகக் கண்காட்சிகளிலும் டிசம்பர் 6-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சிவகாசியில் முதல் முறையாக நாளை மறுநாள் புத்தக கண்காட்சி தொடங்கிய டிசம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதனால் மக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.