வேதாரண்யம் பகுதியில் தர்பூசணி அறுவடை அமோகமாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் அருகே செம்போடை ,புஷ்பவனம், தேத்தாகுளம் ,கத்தரிப்புலம், பெரியகுத்தகை ஆகிய பகுதியில் குறைந்த தண்ணீர் மூலம் அதிக விளைச்சல் பெறக்கூடிய தர்பூசணிகள் ஏராளமாக பயிரிடப்பட்டுள்ளது. இப்போது கோடைகாலம் என்பதால் தர்பூசணிக்கு எதிர்பார்ப்பு இருப்பதால் விவசாயிகள் அனைவரும் தர்பூசணி அறுவடையில் ஈஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தர்பூசணி கிலோ ரூபாய் 15க்கு விற்கப்பட்டு வருகிறது. இங்கு விளையும் தர்பூசணிகலில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தணிக்க இந்த தர்பூசணிகளை விரும்பி வாங்குகின்றனர்.இதனால் அங்கு தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.