Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில்…. தமிழகத்துக்கு புதிய எச்சரிக்கை…. அடுத்த புயல் உருவாகிறது ?

தமிழகத்தை நோக்கி அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று தற்போது உருவாகியுள்ளது. இது தொடர்ச்சியாக மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரை பகுதியை நோக்கி வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருக்கிறது. அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். கடல் இதற்க்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, பிறகு புயலாக வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

தாழ்வு மண்டலமாக மாறுவது, புயலாக மாறுவது, கடல் சார்ந்த சாதக அம்சங்களை பொறுத்து தான் சொல்லமுடியும். இது புயலாகமாறி கரையை கடக்குமோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்குமோ என்று அடுத்த ஓரிரு நாளில் தெரியவரும் என்று பார்க்கலாம். ஒருவேளை புயலாக மாறும் பட்சத்தில் இந்த புயலுக்கு ”புரெவி” என்று பெயர் வைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இது மாலத்தீவினால் வழங்கப்பட்ட பெயர். இதன் மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தொடர்ச்சியாக தமிழகத்தில் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

Categories

Tech |