Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரம்… வந்து கொண்டிருக்கும் ஒரே புரேவி புயல்… எந்தெந்த பகுதிகளுக்கு பாதிப்பு…!!

தென்கிழக்கு வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக உள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை உருவாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் சனிக்கிழமை காலையிலேயே தாழ்வு நிலை உருவாகி விட்டது. இதன் காரணமாக டிசம்பர் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறினால் அது ‘மாலத்தீவு வழங்கிய புரெவி’ என்று பெயர் வைக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த புயல் டிசம்பர் 2 அன்று தமிழகத்தில் கரையை கடக்கும்.  இதனால் தென்மேற்கு வங்கக்கடல், அந்தமான் கடற்கரை பகுதி, நிக்கோபார் தீவு பகுதிகள், குமரி கடல், கடலோர ஆந்திரா பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையை கடக்கும் போது மேற்கு வங்க கடல், அந்தமான் கடற்கரை பகுதி, நிக்கோபார் தீவு பகுதிகளில் சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |