Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இனி தேர்வு இல்லை…. அதிரடி ஹேப்பி நியூஸ்… செம

கொரோனா பேரிடரால் பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது வரை முழுமையாக பள்ளி கல்லூரி திறப்பு காண எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்  நடந்து வருகிறது. இதில் மாணவர்கள் பிரதானமாக எதிர்கொள்ளும் அரையாண்டு தேர்வும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வைரலாகியது.

இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த உழப்பத்துக்குள்ளாகினர். அரையாண்டு தேர்வுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என பரவிய தகவல் தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பாடத் திட்டங்கள் குறைப்பது குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை தரப்படும் என்றும், அதன்பின் 5 நாளில் பாடத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |