Categories
தேசிய செய்திகள்

சவக்கிடங்கில் வைக்கப்பட்ட சிறுமி உடல்…. கடித்து சாப்பிடும் நாய்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

விபத்தில் பலியான சிறுமியின் உடலை நாய் ஒன்று கடித்து சாப்பிடும் வீடியோ காண்போரின் நெஞ்சை பதற செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்று உள்ளது அங்கு விபத்தில் பலியான 13 வயது சிறுமியின் சடலம் ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டு மருத்துவமனை சவக்கிடங்கின் வெளியே வைக்கப்பட்டிருந்துள்ளது. அந்த நேரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் யாரும் அங்கு இல்லாததால் அதை கண்ட தெருநாய் அருகில் வந்து சிறுமியை கடித்து சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், தெருநாய் ஒன்று சவக்கிடங்கின் வெளியே மூடி வைக்கப்பட்டுள்ள ஒரு உடலின் கால் பகுதியில் உள்ள துணியை விலக்கி அந்த உடலை சாப்பிடுகின்றது. இந்த பயங்கர சம்பவம் காண்போரின் நெஞ்சை பதற  செய்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், சிறுமியின் பெற்றோர் கோபத்தில் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம் என்று கூறியதால் தான், நாங்கள் சிறுமியின் உடலை  சவக்கிடங்கு வெளியே வைத்தோம்” என்று சிறுமியின் பெற்றோர் மீது குற்றச்சாட்டிள்ளனர். இதையடுத்து இந்த பெரும் பரபரப்புக்கு பின்னர் சவக்கிடங்கு ஊழியர்கள் இருவரை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. அத்துடன் சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த மருத்துவர் ஒருவரும், மருந்தக ஊழியர் ஒருவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |