இளம்பெண் தன் காதலனுக்காக பிறந்து 3 நாட்கள் ஆன தன் குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் பதற வைத்துள்ளது.
குவாதிமாலா நாட்டில் வசிப்பவர் Alexia(18). இவருக்கு சென்ற வாரம் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட Alexia தன் காதலன் Celement(28) உடன் அருகிலுள்ள கால்வாய் ஒன்றிற்கு சென்று தன்னுடைய குழந்தையை வீசிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து மூன்று நாட்கள் கழித்து தான் குழந்தையை கால்வாயில் வீசியதை தன் தாயிடம் கூறியுள்ளார். இதனால் தன் பேரக்குழந்தையை பார்க்கும் ஆவலில் இருந்த அந்த பெண்ணின் தாய், இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் குழந்தையை கால்வாயில் வீசி மூன்று நாட்கள் ஆனதால் அவர்களால் குழந்தையின் சடலத்தை மட்டுமே மீட்க முடிந்துள்ளது.
இதனால் கோபமடைந்த Alexine தாய் தன் மகளையும், அவளது காதலனை கடுமையாக தண்டிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விசாரணையில், Alexia கடந்த நான்கு மாதங்களாக தான் Celement யை காதலித்து வருகிறார். மேலும் அவர் பெற்றெடுத்த குழந்தை Celement உடையது அல்ல என்பதால், Alexia அந்த குழந்தையை கொல்ல முடிவு செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இப்போது Alexia தன்னுடைய குழந்தையும் இல்லாமல், காதலனும் இல்லாமல் ஜெயிலுக்கு சென்றுள்ளார்.