இன்று காலை சரியாக 9:30 மணி அளவில் 11_ ஆம் வகுப்பு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது.
கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை 10_ ஆம் வகுப்பு மற்றும் +2 எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை வெளியிட்ட நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு +1 முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவித்ததையடுத்து அதற்கான பணி நடைபெற்று வருகிறது.மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறப்பு தேதியை பயன்படுத்தி tnresults.nic.in , dge.tn.nic.in என்னும் இணையதளம் மூலம் தங்கள் முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது .
முன்னதாகவே நடந்த 12_ ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% சதவீத மாணவர்களும் அதற்கு அடுத்து நடந்த 10_ ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.02% சதவீதம் மாணவர்ககள் தேர்ச்சி அடைந்துள்ளதது குறிப்பிடத்தக்கது.