Categories
உலக செய்திகள்

“இன்னைக்கு நாள் எப்படி இருந்துச்சி” கேட்க தவறிய கர்ப்பிணி இளம்பெண்…. நேர்ந்த கொடூரம்…!!

கர்ப்பிணி ஒருவர் காதலனின் கொடுமை தாங்காமல் மாடியிலிருந்து குதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் வசிப்பவர் மெர்சஸ்(22). இவருக்கு இந்த வருடம் ஜூன் மாதம் முகநூல் பக்கத்தின் வழியாக ஜோனதான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக உள்ள மெர்சஸ் வாழ்கை எதிரும் புதிருமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி மெர்சஸ் மீது பொறாமை கொண்ட ஜோனதான் தொடர்ந்து அவரை மிரட்டியதுடன், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனது காதலன் தன்னிடம் கடுமையாக நடந்து கொள்வது குறித்து மெர்சஸ் தனது குடும்பத்தினரிடம் மெர்சல் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மெர்சஸ் அன்றைய தினம் எப்படி இருந்தது? என்று ஜோனத்தானிடம் கேட்காததால், ஜோனாதன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மெர்சஸை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் உயிருக்கு பயந்த கர்ப்பிணியான மெர்சஸ்  படுக்கையறை ஜன்னலிருந்து வெளியே குதித்துள்ளார்.

இதையடுத்து அவர் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் கைதாகியுள்ள ஜோனதான் தன் மீது குற்றச்சாட்டுகள் இல்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார். இருப்பினும் குடும்ப வன்முறை, பெண்கள் மீது வன்முறை உள்ளிட்ட பல வழக்குகளில் அவர் தண்டிக்கப்படுவார் என்று மெர்சஸ் தரப்பு வக்கீல்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |