Categories
உலக செய்திகள்

“திருமணமாகி 3 நாட்களில்” தேனிலவுக்கு சென்ற தம்பதிகள்…. இப்போது கல்லறையில்…. சோகத்தில் குடும்பத்தார்…!!

தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதிகள் திருமணம் ஆன 4 நாட்களில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகரோலினாவை சேர்ந்த பிரபல கார் பந்தய நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த William Rowdy Harrel(30) என்பவருக்கும், Blakley(23) என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இருவரும் தேனிலவுக்காக செல்ல முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இத்தம்பதிகள் Florida Keys என்ற தீவிற்கு தேனிலவுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இருவரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிரக் காரின் மீது வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் தம்பதிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய 62 வயதுள்ள ட்ரக் ஓட்டுநர், அதில் பயணித்த 58 வயதான நபர் மற்றும் 61 வயதுடைய பெண்கள் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 நாட்களில் தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதிகள் பலியாகியுள்ள சம்பவம் அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |