ஊரடங்கு தற்போது முடியும் நிலையில், மேலும் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஏற்பட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள்,கல்லூரிகள் ,திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்ட நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் அமலில் உள்ள நிலையில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் திறப்பு, மெரினா கடற்கரை அனுமதி, மதுபானபார் திறப்பு உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. மேலும் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளது.