நாளைய பஞ்சாங்கம்
29-11-2020, கார்த்திகை 14, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.48 வரை பின்பு பௌர்ணமி.
கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 06.03 வரை பின்பு ரோகிணி.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
கிருத்திகை விரதம்.
கார்த்திகை தீபம்.
அண்ணாமலை தீபம், பௌணர்மி விரதம்.
தனிய நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
நாளைய ராசிப்பலன் – 29.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நெருக்கடியில் இருந்து மன நிம்மதி கிடைக்கும். பெரியவர்களின் மதிப்பு பெறுவீர்கள். மனைவி வழி உறவினரால் உதவிகள் உண்டாகும்.தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். செலவுகள் கட்டுக்கு அடங்கி இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க ஆர்வம் கூடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் நினைத்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்தியை தரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல பலன் உண்டாகும். உடல்நிலை சீராக இருக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு சுப செய்தி கிடைக்கப்பெற்ற நல்ல மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறப்புகள் வழியில் அனுகூலம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும். தொழில் ரீதியில் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை தரும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு சிறு தொகையை செலவிட கூடும். எதிர்பார்த்த உதவி கிடைக்க காலதாமதம் ஆகும். புதிய முயற்சிகளுக்கு வீட்டில் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு செய்யும் செயலில் தடை தாமதம் இருக்கும். பகல் 10.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் வேண்டும்.மதிய வேளைக்கு பிறகு மனநிம்மதி உண்டாகும்.பணவரவில் இருந்த தடைகள் நீங்கி தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பகல் 10.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் உண்டாகும்.உத்யோகத்தில் புதிய தொகையை செலவிடாமல் இருப்பது நல்லது.வெளியிடங்களில் முகம் தெரியாதவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்து விடுங்கள் அதுவே நல்லது.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும்.உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் கூடும். சுபகாரியங்களில் அனுகூல பலன் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வீட்டிலிருந்து பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை கூடும். குழந்தைகளின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு தேவை பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் லாபம் கிடைக்கும். வராத கடன் அனைத்தும் வசூலாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை இருக்கும். சுப காரியம் கை கூடும் நேரத்தில் தடை உண்டாகும். குழந்தைகள் குணமறிந்து நடப்பார்கள்.உத்யோகத்தில் சிறுசிறு மாற்றங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
கும்பம்
உங்களின் ராசிக்கு சுக செய்தி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.வீட்டில் அனைவருடனும் தெய்வதரிசனம் செல்ல வெளியூர் பயணம் செல்லக் கூடும்.அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனையால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உற்றார் உறவினர் உங்கள் தேவையறிந்து நடந்து கொள்வார்கள்.
மீனம்
உங்களின் ராசிக்கு எடுத்த காரியம் பாதியில் நிற்கும் சூழ்நிலை அமையும். குழந்தைகளால் வீண்செலவு இருக்கும். உற்றார் உறவினரிடம் வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிக லாபம் உண்டாகும். புதிய பொருட்களை சேர்க்கும் திறன் அதிகரிக்கும்.