நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியிருக்கும் ‘பாவ கதைகள்’ ஆந்தாலஜி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன்,வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘பாவ கதைகள்’ . இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 18 அன்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. ‘பாவ கதைகள்’ காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை ஆசி துவா சாராவின் பிளையிங் யூனிகார்ன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் ரோனி ஸ்க்ரூவாலாவின் ஆர் எஸ் விபி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன் கதையில் பதம் குமார், கல்கி கொச்லின்,அஞ்சலி நடித்துள்ளார்கள். இயக்குனர் கௌதம் மேனன் கதையில் கௌதம் மேனன் சிம்ரன் நடித்துள்ளனர். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், சாந்தனு , பவானி ஸ்ரீ நடித்துள்ளார்கள். மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கதையில் பிரகாஷ் ராஜ், ஹரி, சாய்பல்லவி நடித்துள்ளனர்.
Idhuku mela wait panna mudiyathu! Presenting the teaser of Paava Kadhaigal.@menongautham @SimranbaggaOffc @AadhityaBaaskar @BhavaniSre @kalidas700 @imKBRshanthnu @VetriMaaran @Sai_Pallavi92 @prakashraaj @VigneshShivn @yoursanjali @kalkikanmani @RonnieScrewvala @ashidua_fue pic.twitter.com/IamJVlclGD
— Netflix India (@NetflixIndia) November 27, 2020