டாக்சி சேவை நிறுவனமான ஓலா-ஊபர் போன்றவற்றிற்கு மத்திய அரசு தற்போது அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.
ஓலா-ஊபர் (Ola-Uber) போன்ற டாக்சி சேவை நிறுவனங்கள் பயணம் செய்பவர்களிடம் அதிகபட்ச கட்டணம் வசூலிப்பதால், அதை கட்டுப்படுத்துமாறு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஓலா-உபர் உள்ளிட்ட நிறுவனங்களில் இணைந்து வாடகை கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தில் 50% வழங்க வேண்டும் என்றும், அந்நிறுவனங்கள் கட்டணத் தொகையில் 20 சதவீதத்தை மட்டுமே பெற வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சக பயணிகளுடன் தங்கள் கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும் முறை பெண்களுக்கு மட்டுமே இனி பொருந்தும். அவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால் அதற்கான 10 சதவீத கட்டணத்தை ஓட்டுநர்கள் அவர்களிடம் வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.