நடிகை லாவண்யா அதிக சம்பளம் தருவதாக கூறியும் மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை லாவண்யா பிரம்மன் மற்றும் மாயவன் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக அக்கறையுடன் தனது பணிகளை மேற்கொள்கிறார். மேலும் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை லாவண்யாவிற்கு மதுபான நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் விளம்பரத்தில் நடிக்க லாவண்யா மறுத்துள்ளார். அதிக சம்பளம் தருவதாக கூறியும் மதுபான விளம்பரத்தில் நடிக்க விருப்பமில்லை என அவர் கூறியுள்ளார்.