ஹெல்மெட்டும், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் பெட்ரோல் வழங்கக்கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இனிமேல் ஹெல்மெட் அணியாமல் சென்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட கூடாது என போக்குவரத்து துறை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு, வடக்கு, தெற்கு போக்குவரத்து துணை ஆணையர்கள் தங்கள் சரகத்துக்குள் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
சென்னை மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றாலும், சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றாலோ பெட்ரோல் போட கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு பதாகை வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.