கொரோனா பொது முடக்கம் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் தொடரும் என புதுச்சேரி அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி புதுச்சேரியில் கொரோனா பொது முடக்க விதிமுறைகள் தற்போதுள்ள தளர்வுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே இரவு நேர ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்தி கொள்ளலாம் என்றும், முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் சற்று கவலை அடைந்துள்ளனர்.