Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை தாக்க வரும்… புதிய புயல் இதுதான்… அறிவிப்பு…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் தமிழகத்தை தாக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மாலத்தீவு வழங்கிய ‘ புரேவி’ என்ற பெயர் வைக்கப்படும். மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |