கேரளாவில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைக்கப்பட்டது அம்பலமானது.
கேரளா மாவட்டம், வலியதுறையை சேர்ந்தவர் அல்பினா அலி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அல்பினாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து நீர் கசிய தொடங்கியுள்ளது.
இதனால் அல்பினா வழியில் அவதிப்பட்டார். மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவற்றின் வயிற்றில் பஞ்சு பொட்டலம் இருந்தது தெரியவந்தது. பிறகு விசாரணையில் அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக பஞ்சை வைத்து தைப்பதது அம்பலமானது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை செய்து வயிற்றிலிருந்து பஞ்சு பொட்டலத்தை அகற்றினர்.
தற்போது அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் டாக்டர்களின் அலட்சியம் குறித்தும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதல்-மந்திரி பிரனாய் விஜயனுக்கும் சுகாதார மந்திரி சைலஜாவும் புகார் அனுப்பியுள்ளனர். புகாரின் பெயரில் விளக்கம் அளிக்க மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.