தமிழகத்தில் திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு அரசு திட்டமிட்டபடி வருகின்ற இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அதற்காக உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தற்போது புயல் உருவாகி வரும் நிலையில், தொடர் கனமழை பெய்ததால் கல்லூரி திறப்பு தேதி ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.