Categories
தேசிய செய்திகள்

பசுமாட்டிற்கு உணவு கொடுக்க முயன்ற போது… எம்பிக்கு நடந்த விபரீதம்..!!

பாஜக மாநில தலைவர் நவீன் குமார் கட்டில் மாட்டிற்கு பழம் கொடுக்க முயன்றபோது அவரது கட்டைவிரலை பசுமாடு கடித்துவிட்டது.

கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி பாஜக சார்பில் 30 மாவட்டங்களிலும் 62 சுவராஜ்ஜிய மாநாடு நடத்தப்பட உள்ளது. அதன்படி உடுப்பியில் நேற்று இந்த மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள பாஜக மாநில தலைவர் நளின் குமார் கட்டில் எம்பி உடுப்பிக்கு வந்தார். அவர் உடுப்பியில் உள்ள கிருஷ்ணா மடத்திற்கு சென்று பூஜைகளில் ஈடுபட்டு, பின்னர் பசுமாட்டிற்கு கோ பூஜை செய்து வழிபட்டார். அந்த பசு மாட்டிற்கு அவர் பணம் கொடுத்தார்.

அந்த சமயத்தில் மாடு நவீன்குமார் கட்டை விரலை கடித்து விட்டது. இதனால் அவர் வலியில் துடித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கிருஷ்ணா மடத்தின் மடாதிபதி ஈஷா பிரியா தீர்த்த ஸ்ரீபாத சுவாமியிடம் ஆசி பெற்று, சுவராஜ்ஜிய மாநாட்டிக்கு புறப்பட்டு சென்றார்.

Categories

Tech |