Categories
தேசிய செய்திகள்

நடுக்கடலில் பிறந்தநாள்… 5 வயது சிறுமியின் சாகசம்… காரணம் இதுதான்..!!

பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் என விழிப்புணர்வு நோக்கத்துடன் 5 வயது சிறுமி நடுகடலில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அர்னாலாவில் நடந்துள்ளது. 

மும்பை சிறப்பு படை போலீஸ் பிரிவில் போலீசாக இருப்பவர் நினாட். இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு 5 வயதில் உர்வி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவருக்கு பிறந்தநாள் தினம் வந்தது. இதை விமரிசையாகவும், வித்தியாசமாகவும் கொண்டாட முடிவு செய்த அவரது பெற்றோர்கள் வழக்கம்போல் நண்பர்களுடன் கொண்டாடாமல் பெண் குழந்தையை காப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிறந்த நாள் கொண்டாடினார். இதன்படி பிறந்தநாள் விழாவை கடலின் நடுப்பகுதியில் கொண்டாடி முடிவு செய்தனர்.

இதன்படி தனது குடும்பத்துடன் அர்னாலா கடற்கரைக்கு வந்துள்ளனர். அங்கிருந்த படகு மூலம் கரையில் இருந்து 3.6 கிலோமீட்டர் தூரம் கடலுக்குள் சென்று, அவர்கள் உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள் அணிந்திருந்தனர். உர்வி தைரியத்துடன் தனது தந்தையுடன் கடலில் இறங்கினார். தெர்மாகோல் உதவியுடன் கேக்கை கடலில் மிதக்க விட்டு அதனை வெட்டி பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். மேலும் அந்த கேக்கில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் என்ற வரிகள் இடம் பெற்றிருந்தன .மன தைரியத்துடன் நடுக்கடலில் 5 வயது சிறுமி பிறந்தநாள் கொண்டாடிய விதம் அப்பகுதியில் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |