மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளதாக படக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தில் படக்குழு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஓடிடி தளத்தில் இருந்து எங்களை அணுகிய போது, மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினோம்.
திரையரங்கில் மாஸ்டர் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.