சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் ஹெல்மெட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக சாலை விபத்துகள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு ஆணையர் கண்ணன் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஹெல்மட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்தைச் சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.