நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் உடையிலும் எப்போதும் அப்டேட்டாக இருப்பவர். இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் உடல் பருமனான தோற்றத்தில் காட்சியளித்தார். பின் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார். சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. மேலும் படப்பிடிப்புகளையும் வேகமாக முடித்து அனைவராலும் பாராட்டப்பட்டார்.
இதையடுத்து இவர் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. மேலும் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ,செகண்ட் லுக் போஸ்டர்கள் கடந்த 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிம்பு எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் ஸ்லிம்மான உடலுடன் மீசை, பெரிய தாடி வைத்து கலக்கிய சிம்பு தற்போது மாடர்ன் லுக்கில் மனதை கவர்ந்துள்ளார். சிவப்பு நிற சட்டை, சிவப்புநிற வாட்ச் அணிந்து செக்கச்சிவந்த சிம்புவாக காட்சியளித்துள்ளார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் .