Categories
தேசிய செய்திகள்

DEC 1 முதல்….. ATM-ல் பணம் எடுக்க…. கார்டு மட்டும் போதாது…. இதுவும் கட்டாயம்…. அதிரடி அறிவிப்பு….!!

பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், வங்கியில் போட்டு வைத்திருக்கக்கூடிய பணத்தை அவ்வப்போது செலவுக்காக எடுப்பதற்கு என  பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் இயந்திரத்தில் பாதுகாப்பு வசதிகளை நாளுக்கு நாள் அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து வங்கிகள் ஈடுபட்டு வருகின்றனர். பண விஷயம் என்பதால், மிகுந்த பாதுகாப்புடன் செயல்படுவார்கள். அந்த வகையில்,

பஞ்சாப் நேஷனல் வங்கி ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் OTP  அடிப்படையில் பணம் எடுக்கும் வசதியை டிசம்பர் 1 முதல் தொடங்க உள்ளது. இதன்படி டிசம்பர் 1 முதல் இரவு 8 மணியிலிருந்து காலை 8 மணி வரை பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் இல் இருந்து ஒரு  முறையில் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் எடுக்க இனி ஓடிபி தேவைப்படும். அதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது கார்டுடன் தங்களது மொபைலையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

Categories

Tech |