கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார் இதனையடுத்து ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் வழியில் திடீரென புகை கிளம்பத் தொடங்கியது அதன்பின் உஷாரான ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை உடனடியாக நிறுத்தி நோயாளியை வாகனத்தில் இருந்து வெளியேற்றினார்
பின் சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ் வாகனம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் மேலும் நோயாளியும் மாற்று வாகனத்தில் கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்