Categories
உலக செய்திகள்

“வாக்காளர் மோசடி” நான் தான் அமெரிக்க அதிபர்….. கோபத்துடன் ட்ரம்ப் பேட்டி…!!

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவரது வெற்றிக்கு பல உலக நாட்டு பிரதிநிதிகளும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் இவரது வெற்றியில் முறைகேடு இருப்பதாக தொடர்ந்து முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேள்வி கேட்ட நிருபரிடம், 

“நான் அமெரிக்க அதிபர் என்னுடன் ஒருபோதும் அப்படி பேச வேண்டாம்” என கோபமாக டிரம்ப் பேசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பேசிய  அவர், அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் மோசமான தேர்தல். வாக்காளர் மோசடி மட்டுமே பைடனின் வெற்றிக்கு வழிவகுத்தது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

Categories

Tech |