நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடி வாசல்’ திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி அன்று வெளியானது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வாடிவாசல் திரைப்படத்தைப் பற்றி தவறான தகவல் பரவி வந்ததுள்ளது. அதாவது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கம் ஆரம்பித்த சிலர் வாடிவாசல் திரைப்படம் ட்ராப் என பதிவு செய்ததால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி ,வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும்.. என பதிவிட்டுள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த பதிவால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் (@VetriMaaran) இயக்கத்தில்
சூர்யா (@Suriya_offl) நடிப்பில் “வாடிவாசல்" வலம் வரும் வாகை சூடும்🙏🏽 #Vaadivasal #StopSpreadingFakeNews— Kalaippuli S Thanu (@theVcreations) November 28, 2020