Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உணவில் பெருங்காயம் சேர்த்தா இவ்வளவு நன்மையா…? என்னென்ன.. பார்ப்போமா..!!

பலவித பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் பெருங்காயத்தின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது.  இது ஈரானை பிறப்பிடமாகக் கொண்டது. இந்தச் செடி பெரும்பாலும் ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது.

இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும் குணம் உள்ளது. மேலும் சமையலில் இதனை சேர்க்கும் போது உணவிற்கு நல்ல நறுமணத்தையும் கொடுக்கும். இதில் அதிகமாக புரதச் சத்து காணப்படுகின்றது. அதனால் தான் அசைவம் உண்ணாத சைவப் பிரியர்கள் அனைத்து வகையான உணவுகளிலும் பெருங்காயத்தைச் சேர்ப்பார்கள்.

பொதுவாக பெருங்காயம் உஷ்ணத்தைத் தரக்கூடியது. உணவை எளிதில் செரிக்கவைக்கும். அதோடு வயிறு உப்பல், கிருமி மற்றும் குடற் புழுவை அகற்றவும் பயன்படுகிறது. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி, நரம்பு பாதிப்புகளைத் தடுக்கும்.

பெருங்காயப் பொடியை வெற்று வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும். ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள். அப்போது  பெருங்காயப் பொடியை வாணலியில்  போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும். இப்படி பெருங்காயம் வயிற்று கோளாறுகள், நரம்பு பிரச்சனைகள், சுவாசப் பிரச்சனைகள், ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாக திகழ்கிறது.

Categories

Tech |