Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுவன்… உயிரை குடித்த லிப்ட்… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி… நீங்களே பாருங்கள்..!!

தாராவியில் லிப்ட்டில் சிக்கிய 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மும்பை தாராவி கிராஸ்ரோடு பால்வாடி பகுதியில் கோஷிசெல்டர் என்ற ஏழு மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வசித்து வருபவர் ஜோரா பிபி. இவருக்கு 4 வயதில் முகமது ஹூசைபா என்ற சிறுவன் உள்ளார். அவர் எப்போதும் துருதுருவென விளையாடிக்கொண்டு இருப்பான். நேற்று மதியம் விளையாடுவதற்காக தரைதளத்தில் தனது அக்கா மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனுடன் சென்றுள்ளார்.

விளையாடி முடித்து விட்டு மதியம் 12.45 மணியளவில் 4 மாடிக்கு லிஃப்டில் சென்றுள்ளார். நான்காவது மாடி வந்தவுடன் அக்கா மற்றும் மற்றொரு சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். சிறுவன் ஷேக் மட்டும் லிப்டின் உள்புறம், வெளிப்புற கதவுகளுக்கு இடையே நின்று கொண்டான். இதனால் பின் கதவை பூட்டிவிட்டு வெளியே செல்ல முயற்சி செய்த போது லிப்டின் கதவு தானாக மூடிக் கொண்டது. இதனால் லிப்டின் கதவுகளுக்கு இடையே சிறுவன் மாட்டிக்கொண்டான்.

லிப்டிங் கதவுகள் மூடப்பட்டதால் மேல் நோக்கி செல்ல தொடங்கியது. இடையே சிக்கிய சிறுவன் கதவுகளுக்கு இடையே நக்கினான். பின்னர் லிப்டிக் இடையில் கீழே விழுந்தான். இந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் லிஸ்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதற்கிடையே வெளியே சென்ற சிறுவர்கள் கூச்சலிட்ட சத்தமிட குடியிருப்புவாசிகள் ஓடிவந்தன. லிப்டில் சிக்கிய சிறுவனை அவர்களால் மீட்க முடியவில்லை.

பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அனுப்பினர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி சிறுவனை மீட்டனர். அப்போது சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சிறுவன் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் சாகுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லிப்டில் சிக்கிய சிறுவன் பலியான சம்பவம் தாராவி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.youtube.com/watch?v=fVQO5kai1D4&feature=youtu.be

Categories

Tech |