பிடி கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1/2 கப்
வெல்லம் – 1/4 கப்
தண்ணீர் – 1 கப்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
எண்ணெய் – சிறிது
செய்முறை:
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, சிறிது ஏலக்காய் தூவி நன்கு கரையும் வரை, கொதிக்க வைத்து கொள்ளவும்.
பின்பு அதில் அரிசி மாவை எடுத்து, மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு கரண்டியால் தொடர்ந்து கிளறி விடவும்.
அதன் பின்பு கிளறிவிட்ட மாவானது, வாணலியில் ஒட்டாமல் திரண்டு கெட்டியாக வரும் போது இறக்கி வைத்து, சிறிது ஆறியதும், லேசான சூடில் இருக்கும் போது, உள்ளங்கைகளில் எண்ணெயைத் தடவியபின், திரண்ட கெட்டியான மாவை சிறிது எடுத்து, கொழுக்கட்டையாக உள்ளங்கையில் வைத்துப் பிடித்து வைக்கவும்.
பிறகு, அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, அதில் கொழுக்கட்டையாக பிடித்த மாவை, வைத்துசில மணி நேரம் நன்கு வேக வைத்து இறக்கி, பறிமாறினால் ருசியான பிடி கொழுக்கட்டை தயார்.