சிறுதானிய அடை செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை – ஒரு கப்
அரிசி – ஒரு கப்
துவரம் பருப்பு – ஒரு கப்
பச்சைப்பயிறு – ஒரு கப்
கொண்டைக்கடலை – ஒரு கப்
மொச்சை – ஒரு கப்
எள்ளு – ஒரு கப்
உளுந்து – ஒரு கப்
கொள்ளு – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 3
இஞ்சி – ஒரு பெரிய துண்டு,
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 2 கீற்று,
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் முந்தைய நாள் இரவே(கோதுமை, அரிசி, துவரம் பருப்பு, பச்சைப்பயிறு,கொண்டைக் கடலை ,மொச்சை, எள்ளு, உளுந்து, கொள்ளு) தானியங்களை ஊறவைத்து,மறுநாள் ஊறவைத்த தானியங்களுடன்,காய்ந்த மிளகாய், இஞ்சி,மிளகு, சீரகம்,சிறிது தண்ணீர் விட்டு மிக்சி ஜாரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி ,அரைத்த மாவை உப்பு கலந்து 1கரண்டி மாவை எடுத்து கல்லில் தோசையாக வார்த்து தோசைக்கல்லில், அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுத்து பரிமாறினால் சுவையான தானிய அடைதயார்.