Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காராமணியில்… குழந்தைகளுக்கு பிடித்த… சத்து நிறைந்த… பூர்ண கொழுக்கட்டை..!!

காராமணி பூர்ண கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் :

கொழுக்கட்டை மாவு              – 1 கப்
உப்பு, எண்ணெய்                        – சிறிது
காராமணிக்காய்                         – 1/2 கப்
தேங்காய் துருவல்                    – 1/4 கப்
பொட்டுக்கடலைமாவு            – 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் விழுது           – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு                                                 –  1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு                         –  1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்                      – சிறிது

செய்முறை :

முதலில் அடுப்பில்  பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சிறிது உப்பு, எண்ணெய்யை அதில் சேர்க்கவும்.மேலும் தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும்.

பின்பு   கொதிக்கும் தண்ணீரில், கொழுக்கட்டை மாவை போட்டு, சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறி,  வெந்ததும் இறக்கி சிறிது ஆற வைத்து  எடுத்தால்  கொழுக்கட்டை மாவு ரெடி.

அடுப்பில் கடாயை வைத்து அதில் காராமணிக்காயை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு வேக வைத்து எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் மற்றோரு கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூளை சேர்த்து தாளித்தபின் மிளகாய் விழுது, நறுக்கிய காராமணிக்காய், உப்பு சேர்த்து சிறிது கிளறி, தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலைமாவை தூவி கிளறி இறக்கவும்.

பின்பு விருப்பமான கொழுக்கட்டை அச்சை எடுத்து, அதன் மேல் இறக்கிய மாவு வைத்து,அதன்  உள்ளே காராமணி பூரணம் வைத்து, நன்கு அடைத்து கொள்ளவும்,

பின்பு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, அதில் அச்சில் அடைத்த மாவை வைத்து  நன்கு  ஆவியில் சில மணி நேரம் வேகவைத்து எடுத்து பரிமாறினால், சுவையான காராமணி பூர்ண கொழுக்கட்டை ரெடி.

Categories

Tech |