பைனாப்பிள் – புதினா ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள் :
அன்னாசி பழம் – 1
புதினா – அரை கட்டு
தேன் – சுவைக்கு
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு.
செய்முறை :
முதலில் அன்னாசி பழத்தை எடுத்து, அதன் தோலை நீக்கியபின் அதன் சதை பகுதியை மட்டும் துண்டுகளாக வெட்டிஎடுத்து கொள்ளவும். பின்பு புதினா இலைகளைநன்கு ஆய்ந்து எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
பிறகு மிக்சிஜாரில் அன்னாசிபழம், புதினா, தேன், ஐஸ்கட்டிகளை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வடிகட்டி, கண்ணாடி கிளாஸில் ஊற்றி எலுமிச்சை சாறு கலந்து பரிமாறினால் சுவையான பைனாப்பிள் புதினா ஜூஸ்ரெடி.