Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பிரெட்டில் சுவையான… மஞ்சூரியன் செய்யலாம்..!!

பிரெட் மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள்               – 4
தக்காளி                                   – 2
வெங்காயம்                           – 2
சோள மாவு                            – ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய்                   – 2
மிளகாய்த் தூள்                   – ஒரு டீஸ்பூன்
பச்சை பட்டாணி                – 2 டேபிள் ஸ்பூன்
மைதா                                     – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு                                        – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்                          – சிறிதளவு
உப்பு                                           – தேவையான அளவு
எண்ணெய்                             – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு, ,தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். மேலும் பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக்கொள்வும் .அதன் பின்பு மிக்சிஜைரில் தக்காளியை அரைத்து சாறெடுத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி சேர்த்து வதக்கி, தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

இறுதியில்  கொதிக்க வைத்த கலவையானது  நன்கு வெந்ததும், அதில்  பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறியபின்,மல்லித்தழை தூவி அலங்கரித்து இறக்கி, பரிமாறினால் . சுவையான  பிரெட் மஞ்சூரியன் ரெடி.

Categories

Tech |