Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இத்தாலியன் ஸ்டைல்… ஹாட் சாக்லேட் ரெசிபி..!!

இத்தாலியன் ஹாட் சாக்லேட் செய்ய  தேவையான பொருட்கள்:

பால்                                    – 1 1/2 கப்
சோள மாவு                     – 1/2 டீஸ்பூன்
சாக்கோ சிப்ஸ்              – 3 டேபிள் ஸ்பூன்
தேன்                                   – 1 டீஸ்பூன்
சர்க்கரை                           – 1 டீஸ்பூன்
கொக்கோ பவுடர்          – 1 டீஸ்பூன்

செய்முறை: 

முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி, சோள மாவை போட்டு  நன்கு கலந்து கொள்ளவும். பின்பு அடுப்பில் வாணலியை வைத்து அதில் கரைத்து வைத்துள்ள பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.மேலும் அத்துடன் சாக்கோ சிப்ஸ், தேன் சேர்த்து,  தொடர்ந்து கிளறி விடவும்.

பின்பு சாக்கோ சிப்ஸ் நன்கு கரைந்ததும், அதில் சாக்கோ பவுடர், சர்க்கரை சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து, சிறிது கிளறி இறக்கி வைத்து, அதை கிளாசில் ஊற்றி பரிமாறினால் சுவையான  இத்தாலியன் ஹாட் சாக்லேட் தயார்.

Categories

Tech |