Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிரடி ருசியில்… ராஜ்மா பிரியாணி ரெசிபி..!!

ராஜ்மா பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் :

ராஜ்மா                                      – 200 கிராம்
பாசுமதி அரிசி                       – 100 கிராம்
வெங்காயம்                           – ஒன்று
தக்காளி                                   – ஒன்று
பச்சை மிளகாய்                   – 2
இஞ்சி, பூண்டு விழுது      – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள்                    – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள்                          – ஒரு சிட்டிகை,
கொத்தமல்லி, புதினா     – ஒரு கைப்பிடி,
நெய், உப்பு                            – தேவையான அளவு.

தாளிக்க :

பட்டை                                    – சிறிதளவு
சோம்பு                                    – சிறிதளவு
ஏலக்காய்                              – சிறிதளவு

செய்முறை :

முதலில் பாத்திரத்தில்  ராஜ்மாவை எடுத்து, தண்ணீர் ஊற்றி, முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் காலையில்,குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஊறிய ராஜ்மாவைவை போட்டு   தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,  மூடி வைத்து  2விசில் வரை வேக விட்டு இறக்கவும்.

பின்பு பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அரிசியை போட்டு, தண்ணீர் ஊற்றி, உதிரியாக வேக வைத்து எடுக்கவும்.

அதன் பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லிதழை, புதினாவை பொடியாக நறுக்கி எடுத்து  கொள்ளவும்.

மேலும் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி  சூடானதும், பட்டை, சோம்பு, ஏலக்காய் போட்டு தாளித்ததும், நறுக்கிய  வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி – பூண்டு விழுது,சேர்த்து வதக்கவும்.

அதனை அடுத்து அதில் இஞ்சி – பூண்டு பச்சை வாசனை போனபின், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்கியதும், ராஜ்மா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

இறுதியில்  அனைத்து ஒன்றாக சேர்ந்து வதங்கி வரும் போது, உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கி பரிமாறினால் சுவையான  ராஜ்மா பிரியாணி தயார்.

Categories

Tech |