கொரோனா காலத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக மாதத்திற்கு ஒரு கிலோ கொண்டக்கடலை வழங்க உத்தரவிட்டது.
அதன்படி சேமிப்பு கிடங்கில் இருந்து நவ.21 க்குள் ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. டிசம்பர் முதல் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் மத்திய அரசு வழங்கிய தலா 5 கிலோ கொண்டக்கடலை இலவசமாக பெற்று பயன்பெறலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில்
வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருந்தாவது:
“மத்திய அரசின் திட்டமான PMGKAY-II திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான 5 மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா ஒரு கிலோ வீதம் மத்திய தொகுப்பில் இருந்து கோவிட்-19 நிவாரணமாக கொண்டைக் கடலை PHH/AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொண்டைக் கடலை மத்திய தொகுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு NAFED நிறுவனம் மற்றும் உள்மண்டல இயக்கம் மூலம் அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. மத்திய தொகுப்பிலிருந்து பெறப்பட்ட கொண்டைக் கடலை டிசம்பர் 2020 மாதத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் PHH/AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ வீதம் வழங்கப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ளது.