வேர்க்கடலை உருண்டை செய்ய தேவையான பொருட்கள் :
வறுத்த வேர்க்கடலை – 200 கிராம்
வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் பாத்திரத்தில் வைத்து, அதில் வேர்க்கடலைகளை போட்டு நன்கு வறுத்து, அதன் தோலை இரண்டாக உடைத்து, அதிலுள்ள வேர்க்கடலை பருப்புகளை மட்டும் எடுத்து கொள்ளவும்.
பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி, வெல்லத்தை போட்டு நன்கு கரையும் உருட்டும் அளவுக்கு பாகு காய்ச்சி கொள்ளவும்.
அதன் பின்பு வேர்க்கடலையை எடுத்து, அதனுடன் வெல்லத்தில் காய்ச்சிய பாகுவுடன், ஏலக்காய்த்தூளையும் சேர்த்து நன்கு கெட்டியாக கிளறியபின் உருண்டைகளாக உருட்டி எடுத்து பரிமாறினால் ருசியான வேர்க்கடலை உருண்டை தயார்.