Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தேங்காய் பாலில்… குழந்தைகளுக்கு பிடித்த… அருமையான ருசியில்… பிரியாணி செய்யலாம்..!!

தேங்காய் பால் பிரியாணி செய்ய தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி                     – 1 கப்
வெங்காயம்                         – 1
கேரட்                                      – 1
பீன்ஸ்                                    – 10
மஞ்சள் தூள்                       – 1 தேக்கரண்டி                                                                                                                                 தேங்காய் பால்                 – 1 கப்
தண்ணீர்                                – 1 கப்
உப்பு                                        – சிறிது
எண்ணெய்                           – 3 டேபிள் ஸ்பூன்
நெய்                                        – 3 டேபிள் ஸ்பூன்

அரைக்க:

பட்டை                                    – 2
பெருஞ்சீரகம்                      – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு                                    – 1
ஏலக்காய்                              – 4
கிராம்பு                                   – 4
இஞ்சி                                      – 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு                                     – 10 பல்
பச்சை மிளகாய்                 – 5

செய்முறை:

முதலில் தேங்காயை எடுத்து துண்டுகளாக நறுக்கி மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.  பின்பு பாத்திரத்தில் பாசுமதி அரிசி போட்டு அரை மணி நேரம் நன்கு  ஊற வைக்கவும்.

பின்பு அதே மிக்சிஜாரில் பட்டை, பெருஞ்சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு, நன்கு மையாக அரைத்து கொள்ளவும்.வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் நெய், சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,  நறுக்கிய வெங்காயம்,  சிறிது உப்பு தூவியதும், அதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து சிறிது கிளறி சில நிமிடம் வேக விடவும்.

பின்னர் அதனுடன்  மஞ்சள் தூள், கேரட், பீன்ஸ், சேர்த்து நன்கு வதக்கியதும், ஊற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து சிறிது கிளறியவுடன், அதில் தேங்காய் பால் சேர்க்கவும்.

பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து  நன்கு வேக விட்டு எடுத்து பரிமாறினால் ருசியான தேங்காய் பால் பிரியாணி ரெடி.

Categories

Tech |