Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூடான சாதத்திற்கு ஏற்ற… அருமையான சைடிஸ் ரெசிபி..!!

பாசிப்பருப்பு கடையல் செய்ய தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு                 – 1/2 கப்
உப்பு                                  – தேவையான அளவு

தாளிக்க:

நெய்                                 – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு                                – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு       – 1 டீஸ்பூன்
வரமிளகாய்                 – 2
கறிவேப்பிலை           – சிறிது
பெருங்காயத் தூள்   – 1 சிட்டிகை
மஞ்சள் தூள்                – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் சுத்தம் செய்த பாசிப்பருப்பை போட்டு,  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சில நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து பொன்னிறமாக தாளிக்கவும்.

அதற்கு பின்பு  அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அதனுடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை போட்டு, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி கெட்டியானதும் இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு கடையல் தயார்.

Categories

Tech |